பதிவு செய்த நாள்
24
பிப்
2017
11:02
தர்மபுரி: தர்மபுரி அன்னசாகரம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக் கொள்ளை விழா இன்று 24ல் துவங்குகிறது. தர்மபுரி அன்னசாகரம், எஸ்.வி.,ரோடு, வெளிப்பேட்டை தெரு, குமாரசாமிப்பேட்டை உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு அங்காளம்மன் கோவில்களில், இன்று மயானக் கொள்ளை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில் அன்னசாகரம் அங்காள அம்மன் கோவிலில், இன்று காலை, 9:00 மணிக்கு கொடியோற்றமும், 10:00 மணிக்கு அபி?ஷக, ஆராதனை மற்றும் அலங்காரம் நடக்கிறது. நாளை காலை, 9:00 மணிக்கு பால்குட ஊர்வலம், பகல், 12:00 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு அங்காள அம்மனுக்கும், தான்டேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. வரும், 26 காலை, 10:30 மணிக்கு அங்காள அம்மன் மயானம் செல்லுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
* இதேபோல், கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோவிலில், மயானக் கொள்ளை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலை, 9:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கொடி ஏற்றம் நடக்கிறது. மாலையில் அம்மனுக்கு பொங்கல் வைக்கப்படுகிறது. நாளை அம்மனுக்கு சக்தி கரகம், அக்னி கரகம் எடுத்து வந்து முகவெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. 26 காலை, 6:00 மணிக்கு சூலம் போடுதல், பகல், 12:00 மணிக்கு அம்மன் தேர் மயானக் கொள்ளைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. 27ல் விடாய் உற்சவமும், 28 மாலை, 6:00 மணிக்கு, அக்னிகுண்டம் தீ மிதி விழா நடக்கிறது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அங்காளம்மன் கோவில்களில் மயானக் கொள்ளை விழா நடக்கிறது.