Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலையில் சப்பரம் எடுத்து செல்லும் ... குன்றத்து கோயில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை சிவன் கோவில்களில் பிப்24, மகா சிவராத்திரி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2017
12:02

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, சென்னையில் உள்ள பிரதான கோவில்களில், அறநிலையத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

நான்கு வழிபாடுகள்: ராத்திரி என்ற சொல், சகலமும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள். உயிர்கள் செயலற்று, சிவபெருமானுக்குள் ஒடுங்கும் காலமே சிவராத்திரி. சிவராத்திரி என்பது நித்ய சிவராத்திரி; மாத சிவராத்திரி; பட்ச சிவராத்திரி; யோக சிவராத்திரி; மாக சிவராத்திரி என, ஐந்து வகைப்படும்.மாசி மாதத்து கிருஷ்ணபட்ச சதுர்த்தசி, அர்த்த ராத்திரியே மகா சிவராத்திரி. சிவராத்திரி இரவில் நான்கு கால வழிபாடு நடைபெறும். முதல் காலத்தில் சோமாஸ்கந்தர்; இரண்டாம் காலத்தில் தட்சிணாமூர்த்தி; மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவர்; நான்காம் காலத்தில் ரிஷபாரூடர் என்று அழைக்கப்பெறும் சந்திரசேகரர் வழிபாடு நடக்கும்.

இந்த நான்கு காலங்களிலும், கருவறையிலுள்ள மூலவருக்கு ஆகம முறைப்படி, அபிஷேகங்கள் செய்து, வழிபாடு நடக்கும். மூன்றாம் காலமான லிங்கோத்பவ காலம் என்பதால் கருவறைக்குப் பின் உள்ள லிங்கோத்பவருக்கு வழிபாடு நடக்கும். அப்போது, ஸ்ரீருத்ர பாராயணம்; ஸ்ரீ சிவ ஸகஸ்ர நாமங்கள் உச்சரித்தல்; தேவாரத்தில் உள்ள லிங்கபுராண
திருக்குறுந்தொகை பாராயணம் செய்தல் ஆகியவை நடக்கும்.

கோடி புண்ணியம்: சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதால், உடல் பிணிகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால், கோடி புண்ணியம் கிடைக்கும். எனவே, சிவலிங்கம், ருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னம் போன்றவைகளைத் தானம் செய்யும் முறை
வழக்கத்தில் உள்ளது. இன்று மகா சிவராத்திரி என்பதால் பிரதான கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்காக அறநிலையத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவொற்றியூர் திருவொற்றிசுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில், கோயம்பேடு குற்றாலீசுவரர் கோவில், வேளச்சேரி தண்டீசுவரர் கோவில், மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் உள்ளிட்ட பிரதான கோவில்களில்
சிவராத்திரி சிறப்பு பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar