பதிவு செய்த நாள்
25
பிப்
2017
12:02
பந்தலுார்: பந்தலுார் அருகே வெள்ளேரி பகுதியில் நடந்த மகா சிவாலய தீப ஓட்டத்தில், பக்தர்கள் பங்கேற்றனர். பந்தலுார் அருகே, வெள்ளேரி சிவன் கோவிலில், மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து, பக்தர்கள் பங்கேற்ற மகா சிவாலய தீப ஓட்டம் நடந்தது. வெள்ளேரி சிவன் கோவில் வளாகத்தில் துவங்கிய நிகழ்ச்சியை நிர்வாகி சந்துசெட்டி துவக்கி வைத்தார். இதில், பூஜை செய்யப்பட்ட தீபம் மற்றும் ருத்ராட்ச மாலைகள் அடங்கிய
பாத்திரம், ஆகியவை எடுத்து செல்லப்பட்டன.
வெள்ளேரியில் துவங்கிய தீப ஓட்டம், பாட்டவயல் ஆரவள்ளி மற்றும் பகவதி கோவில், பஞ்சோரா மாரியம்மன் மற்றும் முனீஸ்வரன் கோவில், முக்கட்டி மாரியம்மன் கோவில், பெரும்பள்ளி முனீஸ்வரர் கோவில், சோலாடி மாரியம்மன் கோவில் சென்று, சோலாடி மாதேஸ்வரன் கோவிலை சென்றடைந்தது. உலக அமைதிக்காகவும், இளைய வழிபாட்டில் பக்தர்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்வதற்காகவும் இந்த தீப ஓட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சோலாடியில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 5:00மணிக்கு விளக்கு பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேவாபாரதி விழாக்கால செயலாளர் ராஜேந்திரன், ராகேஷ், மதன், நடராஜ், தெய்வமகன் உள்ளிட்ட கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் இளைஞர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.