பதிவு செய்த நாள்
25
பிப்
2017
12:02
கரூர்: மஹா சிவராத்திரி விழா முன்னிட்டு, மழை வேண்டி சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கரூரில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு தர்ம ரஷண சமிதி சார்பில், சிவநாம அர்ச்சனை மற்றும் கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. இதில், மழை வேண்டியும், இயற்கை
வளங்கள் செழிக்கவும், வறட்சி வராமல் இருக்கவும், சிறப்பு பிரார்த்தனை மற்றும் விளக்கு பூஜை நடந்ததது. இதில், சேவா பாரதியின் மாவட்ட தலைவர் சுகுமார், மாவட்ட செயலாளர் லோகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதேபோல், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், சரவிளக்கில் பெண்கள் எண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபட்டனர்.