பதிவு செய்த நாள்
25
பிப்
2017
01:02
பழநி: மகா சிவராத்திரியை முன்னிட்டு பழநி பெரியாவுடையார் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்கள் சிறப்பு பூஜைகள், கிராமங்களில் குலதெய்வ வழிபாடு நடந்தது. மகா சிவராத்திரியை முன்னிட்டு பழநி, கீரனுார், தொப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி உட்பட அனைத்து இடங்களிலுள்ள சிவன்கோயில்கள், குலதெய்வ கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் அர்ச்சனைகள் நடந்தது. இடும்பன் மலை அருகேயுள்ள பஞ்சமுக பிரபஞ்சநாதர், வில்வக்குடில் கோயிலில் கணபதி ஹோமம், ருத்ர யாகம், இரவு 7 மணிக்கு உமா மகேஷ்வர பூஜை, இரவு 12 மணி, உச்சிகாலபூஜை அன்னதானம் வழங்கப்பட்டது.
பழநி பெரியாவுடையார் கோயில், மலைக்கோயில் கைலாசநாதர் சன்னதி, புதுநகர் சிவன்கோயில், பெரியநாயகியம்மன் கோயில், கோதைமங்கலம் லாலா மானுார் சுவாமிகள் ஆலயம், ஆயக்குடி சோழீஸ்வரர் கோயில் போன்ற இடங்களில் நந்தி, சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு 12 மணிக்குமேல் உச்சிகாலபூஜை,
அர்த்த ஜாம பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஒட்டன்சத்திரம்: காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் மஹா சிவராத்திரி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகங்கம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சிவலிங்கத்தை வழிபட்டனர்.