கிருஷ்ணகிரி: மயான கொள்ளை முடித்து விட்டு வந்த அங்காளம்மனை, ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நேற்று கிருஷ்ணகிரி கோவிலில் நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு, அம்மன் பூத வாகனத்தில் ஆக்ரோஷமாக புறப்பட்டு சென்று, பின் இரவு முழுவதும் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின், விடியற்காலை அம்மன் தேர் கோவில் வந்து சேர்ந்தது. நேற்று முன்தினம் மாலை, 7:00 மணிக்கு, அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடும் நிகழ்ச்சியும், பின்னர் அம்மனுக்கு விடாக் கஞ்சி ஊற்றும் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு, கஞ்சியை பிரசாதமாக வாங்கிச் சென்றனர்.