பதிவு செய்த நாள்
06
மார்
2017
11:03
திருத்தணி: திரவுபதிஅம்மன் கோவிலில், நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், பெரியகுடிகுண்டா கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலின் திருப்பணிகள், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்து முடிந்தது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா, கடந்த , 3ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதற்காக, கோவில் வளாகத்தில் ஐந்து யாகசாலைகள், 250 கலசங்கள் அமைத்து நவக்கிரக ஹோமம், கோபூஜை ,தன பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று, காலை , 8:00 மணிக்கு, மஹா பூர்ணாஹூதி தீபாராதனையும், காலை , 8:30 மணிக்கு கலச ஊர்வலம் நடந்தது. பின், காலை , 9:00 மணிக்கு, கோவில் மேல் அமை க்கப்பட்ட புதிய விமானத்தின் மீது கலசநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை , 3:30 மணிக்கு, திரவுபதிஅம்மன் திருக்கல்யாணமும்,மாலை ,6:30 மணிக்கு உற்சவர் அம்மன் வீதியுலாவும் நடந்தது. இரவு, 10:00 மணிக்கு சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம் வீதி நாடகம் நடந்தது.