புவனகிரி: புவனகிரியில் ராகவேந்திரர் 422 அவதார தின விழா கொண்டாடப்பட்டது. புவனகிரியில் ராகவேந்திரர் பிறந்த இடத்தில் அவரது கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அவரது பிறந்த தினம் அவதார தினமாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 422 வது ஆண்டு அவதார தினத்தையொட்டி சுப்ரபாரதம், ஸ்தோத்திர பாராயணம், நிர்மாலய அபிஷேகம், பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து ராகவேந்திரருக்கு பால் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு இன்னிசை கச்சேரி, ரத உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை ராகவேந்திர சுவாமிகள் புனித தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.