பதிவு செய்த நாள்
07
மார்
2017
12:03
பெத்தநாயக்கன்பாளையம்: கொட்டவாடி பெரியாயி கோவிலில், ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கொட்டவாடியில், மயான பண்டிகையின் இரண்டாம் நாளான நேற்று, பெரியாயி கோவில் வளாகத்தில், காலை, 11:00 மணியளவில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து, நூற்றுக்கணக்கான கோழிகள் பலியிட்டு, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில், பெரியாண்டிச்சி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொட்டவாடி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர். இன்று, மஞ்சள் நீராட்டுதலுடன், விழா நிறைவடைகிறது.