பதிவு செய்த நாள்
07
மார்
2017
12:03
திருத்தணி: கிராம தேவதையான மத்துாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நாளை, காலை, 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. திருத்தணி ஒன்றியம், மத்துார் கிராமத்தில், கிராம தேவதையாக விளக்கும் மத்துாரம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து, நேற்று, காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இதற்காக, கோவில் வளாகத்தில் ஐந்து யாகசாலைகள், 108 கலசங்கள் அமைக்கப்பட்டன. நேற்று காலை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோபூஜை, தன பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இன்று காலையில், விசேஷ சந்தி, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், கோபுர கலச ஸ்தாபம் மஹா பூர்ணாஹூதி தீபாராதனையும் நடக்கிறது. அதே போல், மாலையில் மூன்றாம் கால யாசசாலை பூஜையும், நாளை, காலை, 6:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை, 9:00 மணிக்கு கலச ஊர்வலம் மற்றும் காலை, 9:30 புதியதாக அமைக்கப்பட்ட விமானத்தின் மீது, கலச நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. பிற்பகல், 11:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு உற்சவர் மத்துாரம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.