பதிவு செய்த நாள்
07
மார்
2017
12:03
நகரி: பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவில் உண்டியலில், பக்தர்கள், 10.32 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சித்துார் மாவட்டம், வடமால்பேட்டை அடுத்த, அப்பலாயகுண்டா கிராமத்தில், பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலை, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்த கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து மூலவரை தரிசித்து, தங்களது வேண்டுதலை அங்குள்ள உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். அந்த வகையில், 30 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை, கோவில் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. இதில், 10 லட்சத்து, 32 ஆயிரத்து, 185 ரூபாய் ரொக்கம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.