பதிவு செய்த நாள்
07
மார்
2017
12:03
ஊத்துக்கோட்டை: ஸ்ரீமாத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான
பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர். எல்லாபுரம் ஒன்றியம்,
கன்னிகைப்பேர் அடுத்த, தர்மாபுரம் கண்டிகை கிராமத்தில் உள்ளது
ஸ்ரீமாத்தம்மன் கோவில். பழமை வாய்ந்த இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது.
பக்தர்கள் பங்களிப்புடன் கோவில் சீரமைக்கும் பணி நடந்தது. பணிகள் முடிந்து,
நேற்று, கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, கடந்த, 3ம் தேதி முதல்
பந்தக்கால், கணபதி பூஜை, கங்கா பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி,
பிரவேசபலி, வைஷ்ணவி மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட, பல்வேறு நிகழ்ச்சிகள்
நடந்தன. நேற்று, காலை 9:00 மணிக்கு கலச புறப்பாடு, விமான கோபுரங்களுக்கு
கும்பாபிஷேக விழா நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு
அருள்பாலித்தார். தொடர்ந்து, 48 நாட்கள், மண்டல பூஜை நடைபெற உள்ளது.