மயிலாடுதுறை அருகே 13ம் நூற்றாண்டை சேர்ந்த சுவாமி சிலை கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2017 06:03
நாகை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே முத்தூரில் பிடாரியம்மன் கோயில் பணியின் போது 13ம் நுõற்றாண்டை சேர்ந்த சிவன், பார்வதி, அம்பாள், நர்த்தன விநாயகர், ஞான சம்பந்தர், சிவன் பார்வதி சேர்நதது போன்ற 6 சிலைகள் மற்றும் பூஜை பொருள்கள் கிடைத்தது. இது ஐம்பொன் சிலைகளா என மயிலாடுதுறை கோட்டாட்சியர் சுபா நந்தினி மற்றும் தாசில்தார் இளங்கோவன், வருவாய்துறை அதிகாரிகள், தரங்கம்பாடி தேனிஷ்கோட்டை தொல்லியல் துறை ஆய்வாளர், பெரம்பூர் போலிசார் விசாரணை செய்தனர். இந்த விக்ரகங்களுக்கு ஊர் மக்கள் பூஜை செய்தனர். பாதுகாப்பு கருதி இந்த சிலைகள் தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்திற்கு போலீஸ் காவலுடன் கொண்டு செல்லப்பட்டது.