பதிவு செய்த நாள்
08
மார்
2017
10:03
மதுரை: மதுரை மேலமாசி வீதி இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சிவபெருமான் தனது ஆத்மலிங்கத்தை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து அதை தானே பூஜை செய்வது வேறெங்கும் இல்லாத சிறப்பு. இங்கு மாசிப்பெருவிழாவை முன்னிட்டு நாளை(மார்ச் 9) காலை 8:00 முதல் 8.30 மணி வரை நடக்கும் திருக்கல்யாண நிகழ்வை www.dinamalar.com இணையதளத்தில் நேரடியாக பார்க்கலாம்.
எந்தக் கோயிலுக்கு போனாலும் சிவலிங்கத்தின் முன்பகுதியையே நாம் தரிசிப்போம். ஆனால், இந்தக் கோயிலில் மட்டும் லிங்கத்தின் பின்புற தரிசனம் நமக்கு கிடைக்கிறது. இதற்கு காரணம் உண்டு. மேற்கு நோக்கி அமர்ந்து சிவபூஜை செய்ய வேண்டுமென்பது நியதி. இங்கே சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய்கிறார். எனவே, லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது. மீனாட்சியம்மன் கோயிலில் சிவனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன்பு, சிவன், அம்பாள் இருவரும் இங்கு எழுந்தருளுவர். இவ்விருவரையும் மூலஸ்தானத்தை நோக்கி வைத்து, இம்மையிலும் நன்மை தருவார், சுந்தரேஸ்வரர், மீனாட்சி மூவருக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை, பூஜை நடக்கும். இந்த பூஜையை சிவனே செய்வதாக ஐதீகம்.
மதுரை, மேலமாசிவீதி இம்மையிலும் நன்மைதருவார் திருக்கோவிலில் மாசிப் பெருந்திருவிழா 22.2.2017 முதல் 12.3.2017 வரை நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக
9.3.2017 (வியாழக்கிழமை)- காலை: 8.00 மணிமுதல் 8.30 மணிக்குள் திருக்கல்யாணம், மாலை: 3.00 மணிக்கு சிறப்பு மஹா அபிஷேகம்
இரவு: 8.00 மணிக்கு- யானை வாகனம், புஷ்ப பல்லாக்கு நான்கு மாசிவீதிகளில் உலா வருதல்
10.3.2017 (வெள்ளிக்கிழமை)- காலை: 8.25 மணிமுதல் 9.00 மணிவரை-திருத்தேர், மாலை: 3.00 மணிக்கு- பிரதோஷம்
11.3.2017 (சனிக்கிழமை)- காலை: தீர்த்தவாரி, இரவு: 9.45 மணிமுதல் 10.00 மணிக்குள்- கொடி இறக்குதல் மற்றும் மௌனபலி
12.3.2017 (ஞாயிற்றுக்கிழமை) காலை: 10.30 மணிக்கு- உற்சவ சாந்தி, நண்பகல்: 12.00 மணிக்கு- பைரவர் பூஜை