குருவாயூர்: குருவாயூர் கோயிலில் நேற்று 1001 கலச அபிஷேகம் நடைபெற்றது. இன்று மதியம் 3:00 மணிக்கு யானை ஓட்டமும், இரவு 8:30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது.குருவாயூரில் 10 நாள் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதன் முன்னோடியாக நேற்று முன்தினம் 975 வெள்ளிக்கலசம் மற்றும் 26 தங்கக்கலசங்களில் கஷாயம், பஞ்சகவ்யம் உள்ளிட்ட திரவியங்கள், தீர்த்தங்கள் நிறைக்கப்பட்டு அதை சுற்றி முளைக்க வைக்கப்பட்ட தானியங்கள் துாவப்பட்டது. பின்னர் கலசங்கள் கோயிலை சுற்றி எழுந்தருள செய்து பிரம்ம கலசம் நிறைக்கப்பட்டது. அதன் பின்னர் தத்துவ கலசம் குருவாயூரப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று மதியம் உச்சபூஜைக்கு முன்னதாக 1001 கலசம் அபிஷேகம் செய்யப்பட்டது. இன்று இரவு 8:30 மணிக்கு கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழா தொடங்குகிறது. திருவிழாவில் குருவாயூரப்பன் விக்ரகத்தை சுமக்கும் யானையை தேர்வு செய்வதற்காக யானை ஓட்டம் இன்று மதியம் நடக்கிறது.