பதிவு செய்த நாள்
08
மார்
2017
10:03
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி - பங்குனி விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி காலை 4:15 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 6:45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனையை தொடர்ந்து சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று காப்பு கட்டி தங்கள் விரதத்தை துவங்கினர். முக்கிய நிகழ்ச்சியான திருக்கோயில் கரகம், மதுக்குடம், முளைப்பாரி ஊர்வலம் மார்ச் 14 லும், திருக்கோயில் காவடி, பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி, முத்தாலம்மன் கோயிலிலிருந்து மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் வரையிலான பால்குட ஊர்வலம் மார்ச் 15 லும் நடக்கிறது. அன்று இரவு 8:20 மணிக்கு காப்பு பெருக்குதலும், மார்ச் 16 இரவு 9:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மார்ச் 17 ல் சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர் சார்பில் அன்னதானம், அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனை, கலை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செந்தில்வேலன் தலைமையில் தக்கார் ராமசாமி, செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வர், கணக்கர் அழகு பாண்டி செய்து வருகின்றனர். விழா ஏப்ரல் 12 ல் நிறைவு பெறுகிறது.