பதிவு செய்த நாள்
09
மார்
2017
01:03
கூடலுார் : கூடலுார், சக்தி விநா யகர் கோவில், 31வது ஆண்டு தேர்திருவிழா, துவங்கியது. காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. இன்று காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாக பூஜை; 9:00 மணிக்கு மணிக்கு கொடி ஏற்றும் நிகழ்ச்சியும், இரவு 7:00 மணிக்கு கோவில் அரங்கில் நடன நாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை, காலை முதல் சிறப்பு பூஜைகளும்; இரவு 7:00 மணிக்கு கலை நிகழ்ச்சியும் நடக்கின்றன. 11ம் தேதி, காலை முதல் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு காந்தி திடலில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 12ம் தேதி, சிறப்பு பூஜைகளும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 13ம் தேதி, 6:00 மணிக்கு முதல் விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு உத்திர நட்சத்திர வருஷாபிஷேகம், சிறப்பு பூஜைகள், நடைபெறும்; பகல் 12:30 மணிக்கு கோவிலிருந்து தேர் ஊர்வலம் துவங்குகிறது.