பதிவு செய்த நாள்
09
மார்
2017
01:03
ஆர்.கே.பேட்டை: ஒரே கல்லின் வடிக்கப்பட்ட சக்கரத்தாழ்வார் மற்றும் யோக நரசிம்ம பெருமாள் கோவிலில், இன்று காலை, சுதர்சன யாகம் நடத்தப்படுகிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனுாரில் அமைந்துள்ளது, அஷ்டலட்சுமி உடனுறை நாராயணபெருமாள் கோவில். 2015, நவ., 18ம் தேதி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மாவட்டத்தில், வேறு எங்கும் இல்லாதவிதமாக, இந்த சன்னிதியில், ஒரே கல்லில், ஒருபுறம் சக்கரத்தாழ்வார் சிலையும், மறுபுறம் யோக நரசிம்ம பெருமாள் சுவாமியும் அருள்பாலிக்கின்றனர். சக்கரத்தாழ்வார் கிழக்கு நோக்கியும், யோக நரசிம்மர் மேற்கு நோக்கியும் வீற்றிருக்கின்றனர். கும்பாபிஷேகம் நடந்து, ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, இன்று காலை, 10:00 மணிக்கு சுதர்சன யாகம் நடத்தப்படுகிறது. 11:00 மணியளவில், உற்சவர் அர்த்த மண்டபத்தில் அருள்பாலிக்கிறார்.