பதிவு செய்த நாள்
10
மார்
2017
11:03
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின் பக்தர்கள் தங்கும் விடுதி, தற்போது, பராமரிப்பு பணிக்காக மூடி வை க்கப்பட்டுள்ளதை, சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என,பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் பிரசித்திப்பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், சமயகுரவர்களால் பாடல் பெற்ற தல மாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு, தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு. மேலும், விழாக்காலங்களில் தென் மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்க ணக்கானோர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் பக்தர்கள் தங்குவதற்காக திருக்கழுக்குன்றம், நால்வர் கோவில் பேட்டையில், தங்கும் விடுதி உள்ளது. இவ்விடுதி,வர்தா புயல் தாக்கத்தால், ம ரம்விழுந்து சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விடுதி அறைக்குள், கட்டில் உட்பட பல பொருட்கள் சேதமடைந் ள்ள ன. இதனால், பராமரிப்பு பணிக்காக, தற்போது விடுதி பூட்டிக்கிடக்கிறது. இதையடுத்து, தங்கும் விடுதியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.