பதிவு செய்த நாள்
31
அக்
2011
11:10
புதுச்சேரி:ரயில் நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் நேற்று யானை முகன் சூரசம்ஹாரம் நடந்தது.புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டிப் பெருவிழா கடந்த 26ம் தேதி துவங்கியது. நான்காம் நாளான நேற்று பகல் 12 மணிக்கு யானை முகன் சூரன் புறப்பாடு நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட சூரன், பாரதி வீதி வழியாக அம்பலத்தடையார் மடத்து வீதி, மிஷன் வீதி, நேரு வீதி, காந்தி வீதி சின்னக்கடை வழியாக மீண்டும் கோவிலை அடைந்தார். பின், சூரசம்ஹாரம் நடந்தது.இன்று (31ம் தேதி) பகல் 12 மணிக்கு சிங்கமுக சூரன் புறப்பாடு, நாளை சூரபத்மனுடன் தேர் புறப்பாடு, 2ம் தேதி 11 மணிக்குத் திருக்கல்யாணம், 3, 4ம் தேதி மாலை 6 மணிக்கு அபிஷேகம், 5ம் தேதி சூரிய பிரபை, 7, 8ம் தேதிகளில் மாலை 6 மணிக்கு அபிஷேகம், 9ம் தேதி இரவு முத்துப் பல்லக்கு உற்சவம், 10ம் தேதி காலை 9 மணிக்கு வீரபாகு உற்சவம், 11ம் தேதி இரவு இந்திர விமான உற்சவம், 12ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.