ஆர்.எஸ்.மங்கலம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி தேவர் குடியிருப்பு முத்துமாரியம்மன் கோ யில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கோயில் மூலஸ்தான கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.