ஸ்ரீவி.,மாரியம்மன் கோயில் பூக்குழி விழா மார்ச் 16ல் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2017 12:03
ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி விழா மார்ச் 16 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை 7:35 மணிக்கு கொடிபட்டம் நகர்வலம் வர, காலை 9:.30 மணிக்கு கொடியேற்றம், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. தொடர்ந்து தினமும் அம்மன் மண்டகப்படி எழுந்தருளல், இரவு வீதி உலா நடக்கிறது. 12ம்நாளான மார்ச் 27 மதியம் 1:30 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி, மறுநாள் காலை 11:.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை பெரியமாரியம்மன் ஆன்மிக சொற்பொழிவு மன்றத்தினர் செய்துள்ளனர்.