பதிவு செய்த நாள்
10
மார்
2017
12:03
கருமத்தம்பட்டி;பொன்னாண்டம்பாளையம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.கணியூர் ஊராட்சி பொன்னாண்டம்பாளையம் அங்காளம்மன் கோவில், புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, விநாயகர், முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தனித் தனி சன்னதிகள் அமைக்கப்பட்டன.கடந்த, 6ம் தேதி காலை, கணபதி ஓமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தம் மற்றும் முளைப்பாலிகை எடுத்து வரப்பட்டது. நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு விமான கலசம் நிறுவப்பட்டது. இரவு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. நேற்று காலை, 5:00 மணிக்கு நாடிசந்தானம், நான்காம் கால ஓமம் மற்றும் பூர்ணாஹூதி நடந்தது. காலை, 8:00 மணிக்கு விமானம் மற்றும் அங்காளம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை முடிந்து அன்னதானம் நடந்தது.