பதிவு செய்த நாள்
13
மார்
2017
12:03
ஓசூர்: ஓசூர் காயத்திரி தேவி கோவிலில், உலக நன்மைக்காக, 100 பிரம்மச்சாரிகள் மூலம், ஜெப வேள்வி நடத்தப்பட்டது. ஓசூர் முல்லை நகரில் உள்ள காயத்திரி தேவி கோவிலில், அனைத்து பக்த ஜனசபா சார்பில், உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும், அனைத்து உயிரினங்களும் நலமுடன் வாழவும், நேற்று காலை, 100 பிரம்மச்சாரிகள் மூலம், ஒரு லட்சத்து, எட்டு முறை மந்திரங்கள் ஓதப்பட்டு, ஜெப வேள்வி நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, விநாயகர் ஹோமம் மற்றும் சிறப்பு யாகங்கள் நடந்தன. பின் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, ஓசூர் காயத்திரி தேவி கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.