திருத்தணி படவேட்டம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2017 11:03
திருத்தணி: படவேட்டம்மன் கோவிலில், மாசி மாத பவுர்ணமியையொட்டி, 108 குத்துவிளக்கு பூஜை, நேற்று முன்தினம் இரவு நடந்தது. திருத்தணி மடம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் கோவிலில், நேற்று முன்தினம், மாசி மாத பவுர்ணமி விழா நடந்தது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், 108 பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.