பதிவு செய்த நாள்
01
நவ
2011
11:11
கழுகுமலை : கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக நடந்தது. போர்க்கோலத்தில் காட்சியளித்த முருகன் சூரன்களை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கண க்கான பக்தர்கள் கலந்து கொ ண்டனர். முருகனின் திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி விழா கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கடந்த 26ந்தேதி துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் திருவீதி உலாவும் நடந்தது. இதையடுத்து கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலுக்கென தனிச்சிறப்பு கொண்ட தாருகாசூரன் வதம் செய்யும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இந்நிலையில் ஆறாம் திருநாளான நேற்று (அக்.31) கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி காலையில் நடைதிறப்பும், திருவனந்தள் பூஜையும் நடந்தது. இதையடுத்து கந்தசஷ்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து கழுகுமலை மலைக்குன்றை சுற்றி வந்தனர். தொடர்ந்து சண்முகர் அர்ச்சனையும், சுவாமி பல்லக்கிலும், வள்ளி தெய்வானை பூஞ்சப்பரத்திலும் திருவீதி உலா வருதலும் நடந்தது. மதியத்திற்கு மேல் கழுகாசலமூர்த்தி சூரசம்ஹார போர்கோல அலங்காரத்துடன் வீரவேல் ஏந்தி வெள்ளி மயில் வாகனத்தின் மீதேறி குமார தெப்பமருகேயுள்ள ருத்திராட்ச மண்பத்தில் எழுந்தருளினார். தொ டர்ந்து மாலையில் போர்க்களத்தில் ஆணவம் கொண்ட சூரர்கள் ஆடும் ஆட்டத்துடன் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் சூரபத்மனின் மகன் பானுகோபன், மந்திரி தர்மகோபன், தாய் மாயை, தம்பி சிங்கமுகாசூரன் ஆகியோரை அழித்த பின்னர் இறுதியாக சூரபத்மனையும் முருகன் சம்ஹாரம் செய்தார். இதையடுத்து சூரபத்மன் மயிலாகவும், சேவலாகவும் மாறி முருகனிடம் தஞ்சமடைந்தார் என்பது வரலாறு. சூரசம்ஹாரத்தை தொடர்ந்து இரவில் சீர்வாங்கி அபிஷேகம் நடத்தப்பட்டு சுவாமி வெள்ளி அங்கியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் கோவில்பட்டி ஆர்டிஓ பொன்னியின்செல்வன், கோயில் நிர்வாக அதிகாரி தமிழானந்தன், உழவாரப்பணிக்குழு தலைவர் முத்துசாமி மற்றும் குடும்பத்தினர், பவுர்ணமி கிரிவலக்குழு தலைவர் முருகன், சுப்புலட்சுமி மரக்கடை மாரியப்பன், கழுகுமலை சுற்றுலா வளர்ச்சிக் குழுவினர், 63 நாயன்மார் குருபூஜைக்குழு தலைவர் சீனிவாசன், துணை தலைவர் தேவகளை ஆனந்தன் உள்பட கழுகுமலை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.