கன்னிவாடி, கன்னிவாடியில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. சுவாமி சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், கரகம் பாலித்தல், மலர் அலங்காரம், உற்சவர் ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு எடுத்தல், அக்னிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முளைப்பாரி அழைப்பு, மஞ்சள் நீராடலுடன் சுவாமி கங்கை புறப்பாடு நடந்தது. விழாவை முன்னிட்டு ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடந்தது.