Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மி மிதித்து அருந்ததி பார்த்து.. ... திருப்பரங்குன்றத்தில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்! திருப்பரங்குன்றத்தில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு ரூ.25 லட்சத்தில் புதிய தங்க சடாரி!
எழுத்தின் அளவு:
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு ரூ.25 லட்சத்தில் புதிய தங்க சடாரி!

பதிவு செய்த நாள்

16 மார்
2017
04:03

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் அருள்பாலித்துவரும் கோமளவல்லி தாயாருக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட சடாரியை பக்தர் ஒருவர் உபயமாக வழங்கினார்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலான தொன்மையும், பழமையும் வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க கோயிலாகத்திகழ்வது கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலாகும். பெரியாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்றதும், 108 வைணவத் திருத்தலங்களில் இத்திருக்கோயில் மட்டுமே. சிறப்பு பெற்ற இக்கோயிலில் கோமளவல்லி தாயார் சமேதராக சாரங்கபாணி சுவாமி அருள்பாலித்து வருகிறார். மூலவர் சாரங்கபாணி சுவாமிக்கு ஏற்கனவே தங்கத்தால் செய்யப்பட்ட சடாரி உள்ளது. ஆனால் தாயாருக்கு தங்கத்தில் இல்லாததால் பெங்களூர் தொழிலதிபரும், திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலருமான சம்பத் ரவிநாராயணன் என்ற பக்தர் 614 கிராம் தங்கத்தில், அரை அடி உயரத்திற்கு சடாரியை வடிவமைத்தும், அதை வைத்து பயன்படுத்துவதற்காக 203 கிராம் வெள்ளியால் செய்யப்பட்ட வெள்ளிதட்டும் செய்து நேற்று கோயிலுக்கு உபயமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை முன்னிட்டு முன்னதாக  பிரதிஷ்டா ஹோமமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதையடுத்து உபயதாரர் சம்பத் ரவிநாராயணன் தங்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள சடாரியை கோயில் நிர்வாக அதிகாரி ஆசைத்தம்பியிடமும், கோயிலின் சக்கரபாணி பட்டாச்சாரியாரிடம் உபயமாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். உபயதாரர் சம்பத் ரவிநாராயணன் ஏற்கனவே இக்கோயிலுக்கு சுமார் 40லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெப்பத்தை உபயமாக வழங்கியிருக்கிறார். அதே போல் தற்போது தயாராகிவரும் தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்திற்கு உபயதாரராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar