பதிவு செய்த நாள்
17
மார்
2017
10:03
திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழா மார்ச் 4ல் துவங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில், திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நேற்று கோலாகல நடந்தது. உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனைகள் முடிந்து, திருமண அலங்காரத்தில் எழுந்தருளினர். மதுரை மீனாட்சிஅம்மன், சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் சந்திப்பு மண்டபத்திற்கு வந்தனர். பின், ஆறுகால் பீடத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.இரவு வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, பூ பல்லக்கில் தெய்வானை புறப்பாடாகி, 16 கால் மண்டபம் அருகே மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் விடைபெறும் நிகழ்ச்சி நடந்தது. இன்று தேரேட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.