Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரளயகாலேஸ்வரர் கோவில் குளம் துார் ... ஊட்டி மாரியம்மன் தேர் திருவிழா: கேடய வாகனத்தில் அம்மன் உலா ஊட்டி மாரியம்மன் தேர் திருவிழா: கேடய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மனிதனாக வாழ ஆன்மீகம் வேண்டும்: சிருங்கேரி சாரதாபீட சுவாமிகள் அருளுரை
எழுத்தின் அளவு:
மனிதனாக வாழ ஆன்மீகம் வேண்டும்: சிருங்கேரி சாரதாபீட சுவாமிகள் அருளுரை

பதிவு செய்த நாள்

23 மார்
2017
11:03

நாமக்கல்: ஒரு மனிதன், மனிதனாக வாழ ஆன்மீகம் வேண்டும், என, சிருங்கேரி சாரதாபீட மடாதிபதி ஸ்ரீவிது சேகர பாரதீ சுவாமிகள் பேசினார். கர்நாடகா மாநிலம், சிருங்கேரி சாரதாபீட மடாதிபதிகள் ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள், ஸ்ரீவிது சேகர பாரதீ சுவாமிகள், சேலத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வந்தனர். தொடர்ந்து, நாமக்கல் விஜயம் செய்தனர். முன்னதாக, நாமக்கல் - சேலம் சாலை, அம்பாள் ஆட்டோ வளாகத்தில், பூர்ண கும்ப மரியாதை செய்யப்பட்டது. அங்கிருந்து, ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள முல்லை மஹாலுக்கு அழைத்து வரப்பட்டனர். பக்தர்களுக்கு ஆசி வழங்கி, ஸ்ரீவிது சேகர பாரதீ சுவாமிகள் பேசுகையில், ஆன்மீகம் வளர அனைவரும் பாடுபட வேண்டும். ஒரு மனிதன், மனிதனாக வாழ ஆன்மீகம் வேண்டும். கடவுளை நமக்கு காட்டுபவர் குரு. எனவே, கடவுள் பக்தியுடன் குரு பக்தியும் வேண்டும், என்றார்.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள் பேசுகையில், நாம் செய்வது எதுவுமில்லை. நல்ல காரியத்தை துவக்கினால், அதை செய்து முடிப்பதற்கான சக்தியை கடவுள் நமக்கு அளிப்பார் என்ற நம்பிக்கை வேண்டும், என்றார். இதையடுத்து, சுவாமிகளின் திருக்கரங்களால், சந்திரமவுலீஸ்வரர் பூஜை நடந்தது. இன்றும் (மார்ச் 23), காலை, 7:30 மணிக்கு, நாமக்கல் முல்லை மஹாலில், சந்திர மவுலீஸ்வர பூஜை நடக்கிறது. காலை, 9:00 மணி முதல், பகல், 12:00 மணிவரை, சுவாமிகள் தரிசனம், பிஷாவந்தனம், பாத பூஜைகள், பலமந்த்ராக்ஷதை பூஜைகள் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு, சுவாமிகள் தரிசனம் முடித்து, நாமக்கல்லில் இருந்து புறப்பட்டுச் செல்கிறன்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar