பதிவு செய்த நாள்
27
மார்
2017
01:03
கோவை : சித்தாபுதுார் ஐயப்பன் கோவிலின், 48ம் ஆண்டு விழாவின் இரண்டாம் நாளான நேற்று, கோவிலில் காட்சி சீவேலி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, கோவில் கருவறையை சுற்றி தீபங்கள் ஏற்றப்பட்டு அழகுற காட்சியளித்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். கோவையின் சபரிமலை என்றழைக்கப்படும், சித்தாபுதுார் ஐயப்பசுவாமி கோவிலின், 48வது ஆண்டு உற்சவத்திருவிழா, பங்குனி மாதம், ரோகிணி நட்சத்திரத்தில் துவங்கி, எட்டு நாட் களுக்கு தொடர்ந்து நடைபெறுகிறது. மார்ச் 25ம் தேதி இரவு, கோவில் தந்திரி சிவ பிரசாத் நம்பூதிரி தலைமையில், அறநிலையத்துறை இணை கமிஷனர் இளம் பருதி கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை, கோவிலில் சிறப்பு பூஜைகளும், சீவேலியும் நடந்தன. இதில் அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ, அம்மன் அர்ஜூனன், முன்னாள் எம்.எல்.ஏ., சேலஞ்சர்துரை ஆகியோர் பங்கேற்றனர். இரவு 7:00 மணிக்கு ஸ்ரீ பத்ரா குழுவினரின், திரிலோகாதிபன் நாட்டிய நிகழ்ச்சியும், இரவு காட்சி சீவேலியும் நடந்தன.