பரமக்குடி: பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடந்தது. பங்குனித் திருவிழாவின் தொடக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரி தல் நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பரமக்குடியில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் மண்டகப்படிகள் அமைத்து, பல்வேறு அமைப்பினர் பூக்களை தட்டுகளில் அலங்கரித்து வைத்திருத்தனர். பல்வேறு இடங்களில் கரகாட்டம், ஆடல் - பாடல், கச்சேரிகள் நடந்தன. தொடர்ந்து இரவு 11 மணிக்கு மேல் 2 மணி வரை அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மேள, தாளம் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக பூத்தட்டுகளை எடுத்து கோயிலுக்கு சென்றனர். காலை 6 மணிக்கு மூலவருக்கு மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.இதனையடுத்து பங்குனித் திருவிழா ஏப்.,2 காலை கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது. ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள், ஆயிரவைசிய சபையினர் செய்திருந்தனர்.