சென்னிமலை: பங்குனி மாத இரண்டாவது திங்கள்கிழமை, அமாவாசையுடன் இணைந்து வந்ததால், ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே, நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் கூட்டம், நேற்று அலைமோதியது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத திங்கள்கிழமைகளில், சுற்று வட்டார பகுதி மக்கள் அதிக அளவில் வருவர். நேற்று அமாவாசையுடன் சேர்ந்து வந்ததால், காங்கேயம், திருப்பூர், பெருந்துறை, ஊத்துக்குளி பகுதி பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.