Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில்களில் பங்குனி திருவிழா: ... நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி கோவில் குறித்து திரைப்படம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2017
01:03

புதுடில்லி: உலக புகழ் பெற்ற திருப்பதி திருமலை கோவில் குறித்த, மிக விரிவான, நேரடியாக படம் பிடிக்கப்பட்ட திரைப்படம், டிவி சேனலில் ஒளிபரப்பாகி உள்ளது. ஆந்திராவில் அமைந்துள்ள, திருப்பதி திருமலை கோவிலில் தரிசனம் செய்வதற்கு, உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் குவிந்து வருகின்றனர். திருமலை வெங்கடேஸ்வர பெருமாள் குறித்து, பல்வேறு திரைப்படங்கள் வந்துள்ளன. முதன்முறையாக, கோவிலின் பல்வேறு பகுதிகளில், நேரடியாக, கோவிலின் சிறப்பம்சம் குறித்து விளக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம், நேஷனல் ஜியாகரபி என்ற, டிவி சேனலில் நேற்று ஒளிபரப்பானது. இந்த படத்தை எடுத்துள்ள, ஆவணப் படங்கள் எடுத்து வரும், ராஜேந்திர ஸ்ரீவத்சா கோண்டபள்ளி கூறியதாவது: உலகின் மிகப்பெரிய சமையலறை என்ற பெயரில், திருமலை கோவில் சமையலறை குறித்து படம் எடுக்க விரும்பினோம். அதற்கான அனுமதி கிடைத்து, படம் எடுத்தோம். அப்போது தான், இந்த கோவிலின் பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்து தெரிய வந்தது. அதை தொடர்ந்து, கோவில் ஆகம விதிகளை மீறாமல், கோவிலின் பல்வேறு பகுதிகள் குறித்தும் படம் எடுத்தோம். கோவிலின் கருவறை, பக்தர்களை வரிசையில் ஒழுங்குபடுத்தும் முறை என, பல பிரமிப்புகள், இந்த படத்தை பார்க்கும் போது ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar