புதுச்சேரி:புதுச்சேரி முருக பக்தர்கள் நற்பணி மன்றம் சார்பில், வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் கந்தர் சஷ்டி கவச கூட்டு பாராயண நிகழ்ச்சி நடந்தது. முருகேச கந்தசாமி துவக்கி வைத்தார். முன்னாள் சபாநாயகர் பழனிராஜா முன்னிலை வகித்தார். டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் சொற்பொழிவாற்றினார். பாரத் அரிச்சந்திரா உரிமையாளர் முருகன், கந்த சஷ்டி புத்தகம் வழங்கினார்.பழனி ராமமூர்த்தி, மாரிமுத்து, வாசுதேவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து 36 வது முறையாக கூட்டு பாராயணம் நடந்தது. மன்ற செயலாளர் கொல்பேர் ஜெயபாலன் நன்றி கூறினார்.