பதிவு செய்த நாள்
30
மார்
2017
01:03
சேலம்: சேலத்தில் உள்ள முக்கிய கோவில்களில், ஹேவிளம்பி வருஷத்திய பஞ்சாங்கம் வெளியீட்டு விழா நடந்தது. ஆண்டுதோறும், யுகாதி பண்டிகையின்போது, தமிழ் வருட பஞ்சாங்கம் வெளியிடும் விழா, கோவில்களில் நடக்கும். அதையொட்டி, சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், 108 லிட்டர் பால் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 8:00 மணிக்கு, ஹேவிளம்பி வருஷத்திய பஞ்சாங்கம் வெளிடப்பட்டது. அப்போது, தங்கள் ராசிக்குரிய பலன்களை, மக்கள் அறிந்துகொண்டனர். மேலும், எந்த தலத்திற்குச் சென்று வழிபாடு நடத்த வேண்டும் என, மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதேபோல், இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள வைஷ்ணவ சபா, கோட்டை அழகிரிநாதர், குமரகிரி தண்டாயுதபாணி, காவடி பழனியாண்டவர், சின்னதிருப்பதி வெங்கடாஜலபதி என, மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் நடந்தது.