பதிவு செய்த நாள்
31
மார்
2017
03:03
திருப்பூர்: திருப்பூர் அருகேயுள்ள, பெருந்தொழுவில், ஆயிரம் ஆண்டு பழமையான, ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணிகள் நிறைவுற்று, கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. புற்றுமண் எடுத்தல், வாசுதேவ புண்யாஹவாசனம், அஷ்ட திக் பாலகர்களுக்கு பூஜை மற்றும் வேத, இதிகாச புராண பாராயணங்கள், நேற்று மாலை துவங்கின. இன்று காலை, 8:00க்கு, முதல் கால யாக பூஜை, மாலை, 6:00க்கு, இரண்டாம் கால யாக பூஜையும் நடக்கிறது. நாளை, காலை, 8:00க்கு, நவரத்ன யந்த்ர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் மற்றும் மூன்றாம்கால யாக பூஜை நடக்கிறது. மாலை, 4:00க்கு, 81 கலச திருமஞ்சனம், கோ பூஜை, திருமூர்த்திகளின் திருக்கண் திறத்தல், நான்கு வேத பயனான நாராயணனுக்கு, நான்காம் கால யாக பூஜை நடக்கிறது. ஏப்.,2ம் தேதி, காலை, 6:00க்கு, திருப்பள்ளி எழுச்சி, ஐந்தாம் கால யாக பூஜை, யாத்ராதானம், தசதானம், கடங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை, 9:00 முதல், 10:30 மணி வரை, விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் மூலவர்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிது. தொடர்ந்து, மகா நிவேதனம், தச தரிசனம், திருப்பாவை, சாற்றுமறை, வேத, இதிகாச புராண பாராயணங்கள், நாலாயிர திவ்ய பிரபந்தம் சாற்றுமறை நடக்கிறது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.