திருநகர்: சிருங்கேரி விதுசேகர பாரதீ சுவாமி, மதுரை விளாச்சேரி ஈஸ்வரன் கோயில், பட்டாபிஷேக ராமர் கோயிலில் பூஜைகள் முடிந்து பேசுகையில், தர்மம் மட்டுமே எப்போதும் காக்கும். சந்தோஷத்தை கொடுக்கும். நிலைத்து நிற்கும். அனைவரும் தர்மத்தின் வழியை பின்பற்றி நடக்க வேண்டும்,’’ என்றார். கோயில் நிர்வாகிகள் விஸ்வநாதன், கண்ணன், மரகதவல்லி, வேத பாடசாலை குரு சங்கர் சர்மா, மாணவர்கள், பொதுமக்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.