பதிவு செய்த நாள்
01
ஏப்
2017
02:04
பொங்கலூர் :பொங்கலூர் மருதுறையான்வலசில் உள்ள விநாயகர், பட்டத்தரசியம்மன், கன்னிமார், கருப்பராயன், வாழைத்தோட்டத்து அய்யன், தன்னாசி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த, 29ல் கணபதி ஹோமம், தொடர்ந்து நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனை, பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், கும்பஸ்தாபனம், முதற்கால யாக பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, எந்திரஸ்தாபனம், அஷ்டபந்தனம் ஆகியன நடந்தது. நேற்று அதிகாலை, 3:15 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், கலசம் புறப்பாடு; காலை, 4:00 மணிக்கு, விமானம், விநாயகர், பட்டத்தரசியம்மன் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.