பதிவு செய்த நாள்
03
ஏப்
2017
12:04
குளித்தலை: குளத்தூர் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. குளித்தலை அடுத்த, குளத்தூர் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பொதுமக்கள், பக்தர்கள் சார்பில், குளித்தலை அடுத்த கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து, புனித நீர், தீர்த்தக்குடம் எடுத்து வரும், நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் கடம்பர்கோவிலை சுற்றி, குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையில் சென்றனர். சுவாமிக்கு புனிதநீர் அபி?ஷகம் செய்யப்பட்டு, ஆராதனை நடந்தது. இன்று மதியம் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், அக்னி சட்டி எடுத்தல், 1,008 அலகு போடுதல், காவடி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். இன்றிரவு சுவாமிக்கு, கிடா வெட்டுதல்; நாளை சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் மஞ்சல் நீராட்டு விழா கோலாகலமாக நடக்கும். விழாவை, குளத்தூர் கிராம மக்கள் செய்துள்ளனர்.