ப.வேலூர்: ப.வேலூர், சுல்தான்பேட்டையில் மஹா பகவதியம்மன் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள, பாலமுருகனுக்கு மார்கழி மாத சிறப்பு சஷ்டி பூஜை நடந்தது. நேற்று சஷ்டி நட்சத்திரத்தையொட்டி, ப.வேலூர் சுல்தான்பேட்டை மஹா பகவதியம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள, பாலமுருகனுக்கு பங்குனி மாத சிறப்பு அபிஷேகங்கள், பூஜை நடந்தது. விசேஷ அலங்காரத்தில் சேவற்கொடி,வேலுடன் பாலமுருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.