பதிவு செய்த நாள்
04
ஏப்
2017
01:04
சேலம்: கோட்டை பெருமாள் கோவிலில், ராமநவமி உற்சவம், நாளை துவங்குகிறது. சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், ராமநவமி விழா, நாளை துவங்கி, வரும், 15 வரை நடக்கிறது. இதையொட்டி, தினமும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. ஏப்., 6, 7ல், மாலை, 6:00 முதல், 9:00 மணி வரை, மூலவருக்கு திருப்பதி வெங்கடேஸ்வர அலங்காரம், தாயாருக்கு, பத்மாவதி அலங்காரம் செய்யப்படும். 14, 15ல், மூலவர் பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், உற்சவர் ராமர் ஆகியோருக்கு முத்தங்கி அலங்காரம் சாத்துபடி செய்யப்படுகிறது. மேலும், 15 காலை, 10:30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனை, வடமாலை, வெள்ளி கவச அலங்காரம், மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பஜனை நடக்கிறது. 7:00 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில், சுந்தரராஜப்பெருமாள் திருவீதி உலா நடக்கிறது.