Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ராமன் -பொருள் தெரியுமா? காப்பாற்றிய ராமநாமம்! காப்பாற்றிய ராமநாமம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநவமியன்று பாட வேண்டிய பாடல்!
எழுத்தின் அளவு:
ராமநவமியன்று பாட வேண்டிய பாடல்!

பதிவு செய்த நாள்

04 ஏப்
2017
04:04

ராமநவமியன்று காலையில் பாட வேண்டிய பாடல் இது.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்

வேய்புனர் பூசமும் விண்ணு ளோர்களும்
தூயகற் கடகமும் எழுந்து துள்ளவே
சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்
வித்தக முனிவரும் விண்ணு ளோர்களும்
நித்தரும் முறைமுறை நெருங்கி யார்ப்புறத்
தத்துறல் ஒழிந்துநீள் தருமம் ஓங்கவே.
ஒரு பகல் உலகெலாம் உதரத்துட் பொதிந்து
அருமறைக் குணர்வரும் அவனை யஞ்சனக்
கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத்
திருவுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை.

மாலையில் பாடவேண்டியது

ராமநவமியன்று மாலையில் ராமனின் பட்டாபிஷேகப் பாடல்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.

மங்கள கீதம் பாட
மறையொலி முழங்க வல்வாய்ச்
சங்கினம் குமுறப் பாண்டில்
தண்ணுமை யொப்பத் தாவில்
பொங்குபல் லியங்கள் ஆர்ப்பப்
பூமழை பொழிய விண்ணோர்
எங்கள் நாயகனை வெவ்வேறு
எதிர் அபிடேகஞ் செய்தார்

மாதவர் மறைவ வாளர்
மந்திரக் கிழவர் முற்று
மூதறி வாளர் உள்ளஞ்
சான்றவர் முதனீ ராட்டச்
சோதியான மகனு மற்றைத்
துணைவரும் அனுமன் தானும்
தீதிலா இலங்கை வேந்தும்- பின்
அபிடேகஞ் செய்தார்.

சித்தமொத் தனன்என் றோதுந்
திருநகர்ச் செல்வ மென்ன
உத்தமத் தொருவன் சென்னி
விளங்கிய உயர்பொன் மௌலி
ஒத்துமெய்க் குவமை கூர
ஓங்குமூ வுலகத் தோர்க்குந்
தத்தம் உச்சியின்மேல் வைத்தது
ஒத்தெனத் தளர்வு தீர்ந்தார்

ராம பிரானின் சிரத்தின் மேல் பொன்கிரீடம் விளங்கியது கண்டு, மூவுலகிலும் உள்ள மக்களும் தத்தம் சிரமேல் பொற்கிரீடம் வைக்கப்பட்டது போலவே எண்ணி மகிழ்ந்தார்கள் என்பது கடைசிச் செய்யுளின் கருத்து.  மக்களிடையே தெய்வ பக்தியும், நன்னடத்தையும் வேரூன்றி வளரவேண்டும் என்று ராமநவமியன்றும், மறுநாள் புனர்பூஜையிலும் ராமபிரானிடம் பிரார்த்திக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar