பதிவு செய்த நாள்
06
ஏப்
2017
12:04
திருத்தணி: கோதண்டராமர் சுவாமி கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவில், நேற்று, உற்சவர் கோதண்டராமருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருவாலங்காடு ஒன்றியம், நெடும்பரம் கிராமத்தில் உள்ளகோதண்டராம சுவாமி கோவிலில், கடந்த மாதம், 26ம் தேதி முதல், பங்குனி மாத பிரம்மோற்சவம் நடந்தது வருகிறது. தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்து வருகிறது. இரவு, ஒவ்வொரு வாகனத்தில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்த வகையில், நேற்று முன்தினம், உற்சவர் குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, திருமஞ்சனம் மற்றும் தேதி ஊஞ்சல் சேவை நடந்தது. நேற்று, காலை, 10:30 மணிக்கு, திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், மாலையில் ராமநவமி வீதியுலா நடைபெற்றது. இன்று, காலையில் உற்சவர் திருமஞ்சனம் மற்றும் புஷ்ப யாகத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.