கொடுமுடி: மலையம்மன்கோவில் தேர்த் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். கொடுமுடி மலையம்மன் கோவிலில், பங்குனி உத்திர ரதோற்சவ விழா, கடந்த மார்ச், 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அலங்காரம், ஆராதனை, அபிஷேகம், ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. திருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதில், கொடுமுடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தேர் வடம் பிடித்தனர். இன்று வேல் ஊர்வலம், இரவு, 7:00 மணிக்கு கருப்பண சுவாமிக்கு பால் பொங்கல் நடக்கிறது. நாளை உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது.