பவானி: பவானி ஆஞ்சநேயர் கோவிலில், ராம நவமியை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. பவானி, காவிரி வீதியிலுள்ள ஸ்ரீ யோக பீட சதுர் புஜ ஆஞ்சநேய சுவாமி கோவிலில், கடந்த, 2ல் ராம நவமி விழா துவங்கி, நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் சீதா கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, 9:00 மணியளவில் சீதா உடனமர் ராமபிரானுக்கு சிறப்ப அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தேரோட்டம் நடந்தது. ஐயப்பசேவா மண்டபத்தில் இருந்து புறப்பட்ட தேர், முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலை அடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார்.