பழநி பங்குனி உத்திர விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளாக ஏப்.,8ல் இரவு திருக்கல்யாணமும், ஏப்.,9ல் கிரிவீதியில் தேரோட்டமும் நடக்கிறது. கொடுமுடி தீர்த்தக்காவடிக்கு பெயர்பெற்ற பழநி பங்குனி உத்திரவிழா, திருஆவினன்குடிகோயிலில் ஏப்., 3ல் கொடியேற்றத்துடன் துவங்கி 12ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக பக்தர்கள், அலகு குத்தியும், மயில்காவடிகள் மற்றும் தீர்த்தக்குடங்களுடனும் குவிகின்றனர்.