கீழக்கரை: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் பங்குனி பிரமோத்ஸவ விழாவில், தேரோட்டம் நடந்தது.
திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில், பங்குனி பிரமோத்ஸவ விழா ஏப்., 1 சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் உற்சவ மூர்த்திகளுக்கு விஷேச திருமஞ்சனம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு, ‘கோவிந்தா’ கோஷம் முழங்க தேர் வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர். ஸ்ரீ தேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாத பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோயில் பட்டாச்சாரியார்கள் நாலாயிர திவ்ய பிரபந்தப்பாடல்கள் பாடினர். நிறைவாக தீர்த்தம் தெளிக்கப்பட்டு, பக்தர்கள் கூட்டத்தில் கனிகள் வீசும் நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை 9:00 மணிக்கு ஆதிஜெகநாத பெருமாளும், பட்டாபிஷேக ராமரும் சேதுக்கரைக்கு சென்று தீர்த்தவாரி பூஜையில் பங்கேற்கின்றனர். பின்னர் கருட, ஆஞ்சநேய வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். திவான் மகேந்திரன், சரக அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் கண்ணன் பங்கேற்றனர்.