பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
02:04
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை 8:30 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் மாப்பிள்ளை திருக்கோலத்துடன் கோயிலை வலம் வந்தார். பின் மாப்பிள்ளைஅழைப்பு, நிச்சயதார்த்தம் நடந்தது. சுந்தரராஜப் பெருமாள், சவுந்தரவல்லித்தாயாருடன் மண மேடையில் ஊஞ்சலில் எழுந்தருளினர். அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க, பெருமாளுக்கும், தாயாருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. மாலை மாற்றல், அர்ச்சகர்கள் அக்னியை வலம்வந்து அம்மி மிதித்து, தேங்காய், பூப்பந்து விளையாடுதல் நிகழ்ச்சியை நடத்தினர். கோயிலில் கூடியிருந்த ஏராளமான பெண்கள், தங்களது தாலிக்கயிற்றை புதுப்பித்து கட்டிக்கொண்டனர். ஏப்., 13 வரை, 5 நாட்கள் ஊஞ்சல் சேவையும், அன்று இரவு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பூப்பல்லக்கில் வீதிவலம் வருவார்.ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.