புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2017 02:04
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு சஹஸ்ர சங்காபிஷேக விழா நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை 7:--00 மணிக்கு சகஸ்ர சங்காபிஷேக விழா இரண்டாம் கால யாக பூஜையுடன் துவங்கியது.தொடர்ந்து மணக்குள விநாயகருக்கு கலசாபிஷேகம், 1008 சங்காபிஷேகம், உற்சவமூர்த்திக்கு 108 சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது.இரவு 7:00 மணிக்கு முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதியுலா வந்து, பக்தர்களுக்குஅருள் பாலித்தார்.நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுவினர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வேங்கடேசன் செய்திருந்தார்.